டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

2 months ago 14

புதுடெல்லி,

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 34 கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், 35-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை (புதன்கிழமை) கூடுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article