![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35586309-dsghg.webp)
டெல்லி,
இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில் (கத்தர்வ்யா பாத்) ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றார். அதேபோல், கடமை பாதையில் ராணுவ அணிவகுப்பும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர், மந்திரி மந்திரிகள், வெளிநாட்டு தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்வர்.
இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
அதேவேளை, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து பஞ்சாயத்து தலைவர்கள் 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளுமாறு 600 பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
சுகாதாரம், கல்வி, பெண்கள் குழந்தைகள் முன்னேற்றம், குடிநீர், தூய்மைப்பணி, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தங்கள் பஞ்சாயத்தை சிறப்பாக வழிநடத்திய 600 பஞ்சாயத்து தலைவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.