2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா.. இங்கிலாந்துடன் நாளை மோதல்

3 hours ago 1

கட்டாக்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் தொடரை இழக்க கூடாது என்பதில் இங்கிலாந்து தீவிரமாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Read Entire Article