![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38270053-1.webp)
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் டி சீரிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற14-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38270441-1a.webp)
"ரெட்ரோ" படத்தின் டீசரில் பூஜா ஹெக்டேவுக்கு எந்த வசனமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 'ரெட்ரோ' டீசர் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, வெளியான 'ரெட்ரோ' படத்தின் தமிழ் டீசர் 2.5 கோடி பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.