
புதுடெல்லி,
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் ஆர்வமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதனையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ல் எண்ணப்படுகின்றன. டெல்லி சட்டசபைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில் டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் டெல்லியில் பாஜகதான் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
என்.டி.டி.வி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 51-60
ஆம் ஆத்மி 10-19
காங்கிரஸ் 0
சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 40
ஆம் ஆத்மி 30
காங்கிரஸ் 0
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 37 - 43
ஆம் ஆத்மி 32-37
காங்கிரஸ் 0 -2 இடங்கள்
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 35-40
ஆம் ஆத்மி 32-37
காங்கிரஸ் 0-1 இடங்கள்
போல் டைரி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 42-50
ஆம் ஆத்மி 18 -25
காங்கிரஸ் 0-2
பிற கட்சிகள் 1 இடங்கள்
இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக -51 -60
ஆம் ஆத்மி 10-19
பீப்பிள் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்
பாஜக 51-60
ஆம் ஆத்மி 10 - 19
காங்கிரஸ் 0
சாணக்யா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 39-44
ஆம் ஆத்மி 25-28
காங்கிரஸ் 2-3
ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,
பாஜக 39 -45
ஆம் ஆத்மி 22-31
காங்கிரஸ் 0-2 இடங்கள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.