"96" இயக்குநரின் கனவை நனவாக்கிய சூர்யா

5 hours ago 1

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார். அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறார் பிரேம்குமார்.

இந்நிலையில் இயக்குநர் பிரேம் குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை, அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி.

இந்த வகை காருக்காக நீண்ட நாள் காத்திருந்தோம். சலிப்பாகி வேண்டாம் என நானே முடிவெடுத்தபோதும், சூர்யா சாரின் தொடர் தேடுதலால் இந்த கார் கிடைத்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் பிரேம் குமார்.

Read Entire Article