புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேர முடிவில் 41.2 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது. இதன்படி, டெல்லியில் 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் ஒரு நாளில் பெய்த அதிக மழைப்பொழிவு இதுவாகும்.
கடைசியாக, கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி 75.7 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்திருந்தது. அது, டிசம்பரில் ஒரு நாளில் பதிவான அதிக மழைப்பொழிவாகும். அதற்கு பின்னர், 101 ஆண்டுகளுக்கு பின்னர், டிசம்பரில் ஒரு நாளில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதேபோன்று, 1901-ம் ஆண்டில் மாதாந்திர மழைப்பொழிவு பற்றிய பதிவுகள் தொடங்கியதில் இருந்து, நடப்பு ஆண்டு டிசம்பர் மாதம் 5-வது முறையாக அதிக மழைப்பொழிவை சந்தித்துள்ளது.
டெல்லியில் காற்று தர குறியீடும் முன்னேற்றமடைந்து உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி காற்று தர குறியீடு ஆனது, திருப்திகரம் என்ற அளவில் 152 ஆக பதிவாகி இருந்தது.