
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் வைத்திருந்த பையில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் இருந்த 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் ரூ. 1.91 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த பயணியை போலீசார் கைது செய்து செய்தனர்.