டெல்லி தேர்தல் முடிவுகளை நான் பார்க்கவில்லை: பிரியங்கா காந்தி

3 hours ago 1

கன்னூர்,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று வயநாட்டு சென்றுள்ளார். அப்போது கன்னூரில் செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் டெல்லி தேர்தல் நிலவரம் பற்றி கேட்டனர், அதற்கு அது பற்றி எனக்கு தெரியாது, தேர்தல் முடிவுகளை நான் பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

வயநாடு சென்றுள்ள பிரியங்கா காந்தி இன்று சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். நாளை மானந்தவாடி அருகே 4-ம் மைல் பகுதியில் உள்ள அரங்கில் வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு சுல்தான்பத்தேரியில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் வயநாட்டில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

Read Entire Article