டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்; அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி வெற்றி!

2 hours ago 1

டெல்லி: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். 9 சுற்றுகள் வரை தொடர்ந்து பின்தங்கியிருந்த அதிஷி, இறுதிச் சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி; 3வது முறையாக அரியணை ஏறுமா ஆம் ஆத்மி?; 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்குமா பாஜக? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியில் 430 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு, கல்காஜியில் 3231 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி பின்னடைவு, மால்வியா நகரில் 5656 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தி பின்னடைவு, ஷகூர் பச்தில் 15745 வாக்குகள் வித்தியாசத்தில், சத்யேந்தர் ஜெயின் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

புதுடெல்லி தொகுதியில் 3,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். 3 முறை டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் படுதோல்வி அடைந்துள்ளார். 2013, 2015, 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை வீழ்த்தினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். ஜங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார்.

 

The post டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்; அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி வெற்றி! appeared first on Dinakaran.

Read Entire Article