![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38245812-atishi.webp)
புதுடெல்லி,
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அம்மாநில முதல்-மந்திரி அதிஷி போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, டெல்லி முதல்-மந்திரி அதிஷி 18,719 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 21,519 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,800 ஆகும்.