டெல்லி: உண்மையான நலன்புரிதல் பணம் கொடுப்பதில் இல்லை; அது.. சந்தீப் தீட்சித் விளக்கம்

2 hours ago 3

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் நிறுத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் தீட்சித், மக்களின் சட்டைப்பையில் பணம் போடுவது என்பது உண்மையான நலன்புரிதல் இல்லை. உண்மையான நலன்புரிதல் என்பது மக்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கு உதவுவது என்றார்.

ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டால் ரூ.2,100 கிடைக்கும். காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் ரூ.2,500 கிடைக்கும். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் ரூ.2,500 கிடைக்கும் என டெல்லி மக்களுக்கு முன்பே தெரியும்.

ஆனால், உண்மையாக தீர்க்க வேண்டிய விவகாரங்கள் என்றால் காற்று மாசுபாடு, பழுதடைந்த சாலைகள், பஸ்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை ஆகும். டெல்லிக்கான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். டெல்லியின் நகராட்சி பகுதிகளில் நான் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

சமீப நாட்களாக ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க.வும் வாக்காளர் பட்டியல் பற்றியே ஆலோசித்து வருகின்றனர். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியானது டெல்லி மக்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Read Entire Article