டெல்லி அதிரடி பேட்டிங்.. குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

5 hours ago 2

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் போரெல் - கருண் நாயர் களமிறங்கினர். இதில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரெல் 9 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கே.எல்.ராகுலும் அதிரடியாகவே விளையாடினார்.

இதனால் டெல்லி அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. கருண் நிதானமாக விளையாட கே.எல். ராகுல் 14 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் கருண் நாயர் வேகமாக மட்டையை சுழற்ற டெல்லி கேப்பிடல்ஸ் பவர்பிளேயில் 73 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 31 ரன்களில் அவுட்டானார்.

இதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் அக்சர் படேல் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஸ்டப்ஸ் 31 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த அக்சர் படேல் 38 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.

இறுதி கட்டத்தில் அசுதோஷ் சர்மா (37 ரன்கள்) அதிரடியாக விளையாட டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது. 

Read Entire Article