டெரிட்டோரியல் ஆர்மியில் 2847 இடங்கள்

3 months ago 15

பணியிடங்கள் விவரம்:

1. Soldier (General Duty/Tradesman) தகுதி: குறைந்தது 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 42க்குள். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்த பட்சம் 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
2. Soldier (Clerk): தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வில் தொழிற்கல்வி பிரிவில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
3. Soldier (House Keeper/Mess Keeper): தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 42க்குள்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்குரிய உடற்தகுதி: குறைந்தபட்சம் 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், நேரடி ஆட்சேர்ப்பின் போது விண்ணப்பதாரர் பெற்றிருக்கும் உடல் தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற்தகுதி திறன் தேர்வில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், புஷ்்அப் எடுத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பொது அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி ஆட்சேர்ப்பில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம், தேதி:இடம்: கோவை, பிஆர்எஸ் மைதானம்.

தேதி: 7.11.2024, 8.11.2024.மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.jointerritorialarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

The post டெரிட்டோரியல் ஆர்மியில் 2847 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article