சங்ககிரி, பிப்.25: சேலம் சங்ககிரி தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி எம்ஜிஆர் நகர், மட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (40). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சோனியாகாந்தி (30). இருவரும் நேற்று மதியம் 1 மணிக்கு, டூவீலரில் லோன் சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சங்ககிரி ஆர்எஸ் பஸ் ஸ்டாப் அருகே இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த, ட்ரெய்லர் லாரியின் டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டி வந்து டூவீலர் மீது மோதி விபத்தானது. இதில் டூவீலரில் இருந்து கீழே விழுந்ததில் சோனியா காந்தியின் தலை மீது லாரியின் டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் பெருமாள் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று சோனியா காந்தியின் சடலத்தை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
The post டூவீலர் மீது ட்ரெய்லர் லாரி மோதி கணவன் கண் முன்னே மனைவி தலை நசுங்கி பலி appeared first on Dinakaran.