டிரினிட்டி அகடாமி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

3 weeks ago 6

கிருஷ்ணகிரி, டிச.25: கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலை ஆனந்த நகரில் இயங்கி வரும் டிரினிட்டி மெட்ரிக் பள்ளி மற்றும் டிரினிட்டி அகாடமி பள்ளிகள் சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் 30ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. தாளாளர் காட்வின் மைக்கேல் தலைமையேற்று நடத்தி வைத்தார். டாக்டர் கிம் அம்மா முன்னிலை வகித்தார். பள்ளியின் போதகர் மார்க் டேனியல் இறைவணக்கத்தை பாடி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் முதன்மை லைப்ரரியன் டாக்டர். செந்தில்குமார் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை வழங்கி படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கமலினி காட்வின் மேற்பார்வையில் இரு பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post டிரினிட்டி அகடாமி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article