சென்னை: கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்ட விரோதமாக மணல் அள்ளுவது, டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவது, மதுக் கூடங்களுக்கு அனுமதி வழங்குவது, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றுவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.