
சென்னை,
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் கஸ்தூரி சந்தானத்தின் அம்மாவாக தேவகி & ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் 'லொள்ளு சபா' மாறன் 'ஆல் லாங்குவேஜ் ஆறுமுகம்' மற்றும் ரெடின் கிங்ஸ்லி 'கோபால்' கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.