'பிரம்மோஸ்' ஏவுகணை: மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது - ஜெய்ராம் ரமேஷ்

3 hours ago 2

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

'பிரம்மோஸ்' ஏவுகணை பெயர் தற்போது செய்தியில் அடிபடுகிறது. இது, பிரம்மபுத்திரா, மோஸ்க்வா ஆகிய நதிகளின் பெயரில் அமைந்துள்ளது. ரஷிய-இந்திய கூட்டு முயற்சிக்கு இது சிறந்த உதாரணம். எல்லா ஆட்சிகளிலும் இது நீடித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டம், 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோரது ஆட்சிக்காலங்களில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் பிரம்மோஸ் தலைமையகத்தை ரஷிய அதிபர் புதின் திறந்து வைத்தார். கடந்த 2005-ம் ஆண்டு 'பிரம்மோஸ்' ஏவுகணை, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. எல்லாமே மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article