
சென்னை,
சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபிள் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தனம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பேசுகையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல ஆர்வமாக இருக்கும். அதே போல இந்த படத்தின் கதையும் எனக்கு பிடித்திருந்தது. அதுனால் தான் தயாரித்தேன். சந்தானம் படத்தில் எவ்வளவு பெஸ்ட் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்து உள்ளார். இந்த படம் வெற்றிகரமாக சென்றால் அடுத்த படத்தையும் தயாரிப்பேன் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சந்தானம் பேசுகையில், 'ஏன் மச்சான் காமெடியனாக நடிக்கும் பொழுது நீ நீயாக இருப்ப. ஹீரோவாக ஆன பின்ன மாறி விட்ட என்று கேட்டான் ஆர்யா. இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' பழைய சந்தானத்தை வெளியே கொண்டு வர வைக்கும். இயக்குனர் பிரேம் தமிழ்நாட்டின் கிறிஸ்டோபர் நோலன்' என்று கிண்டலாக சந்தானம் கூறினார்.
அதன்பின்னர் சந்தானத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு-
'கோவிந்தா கோவிந்தா பாடலை கிண்டல் செய்ய வில்லை. நான் பெருமாள் உடைய பக்தர் எனக்கு முதல் பாடல் கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் வைத்தேன்.எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. பெருமாள் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் திருப்பதிக்கு கீழ் இருந்து மேல்திருப்பதிக்கு நடந்து செல்வேன்.
ஏற்கனவே நிறைய ஹீரோ படங்கள் வெயிட்டிங் உள்ளது. நிறைய படங்களில் என்னை காமெடி வேடங்களில் பார்த்து விட்டனர். இனியும் காமெடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால் புதுசா ஒரு ஸ்டைலில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நண்பன் சிம்புக்காக மீண்டும் அவர் படத்தில் காமெடியனாக நடிக்கிறேன். அதே போல் நண்பர் உதயநிதி அழைத்தால் எனக்கு சில விஷயங்கள் செட்டானால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன்' என்று சந்தானம் தெரிவித்தார்.