எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை.. நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவம்

3 hours ago 2

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் நேற்று இரவு அத்துமீறியதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்திருந்தது. காஷ்மீரின் சம்பா பகுதியில் டிரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிசத்தம் கேட்டதாக ஏ.என்.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தி முடித்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது. பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் அத்துமீறியதை தொடர்ந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன்படி காஷ்மீரின் சம்பா, கதுவா, வைஷ்ணவோதேவி வட்டாரத்தில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தானின் டிரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இன்றைய பேச்சுவார்த்தையில் தாக்குதலை முற்றிலும் நிறுத்த ஒப்புதல் செய்யப்பட்டிருந்தநிலையில் தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்திய எல்லைக்குள் தற்போது எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை என்றும், நிலைமை அமைதியாகவும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Read Entire Article