டிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டுக்குள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள்: சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு

1 hour ago 1

திருப்பதி: டிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டுக்குள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று சிறப்பு பயிற்சி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து பேசினர்.
திருப்பதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாநில அரசு விரைவில் வெளியிட உள்ள மெகா டி.எஸ்சி. ஆசிரியர் பயிற்சி தேர்வுக்காக இலவசப் பயிற்சித் திட்டத்தை கலெக்டர் வெங்கடேஸ்வர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் ேபசியதாவது: மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் 5 கையெழுத்தில் மெகா டிஎஸ்சி ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் டிஎஸ்சி பயிற்சியின் ஒரு பகுதியாக உதவித்தொகை மற்றும் புத்தகங்களும் வழங்கப்படும். பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நடப்பு விவகாரங்கள் மற்றும் பாடத்தின் மீதான பிடிப்பை அதிகரித்து, அப்ஜெக்டிவ் தேர்வு மற்றும் போட்டி இருப்பதால் திட்டமிட்டு தயார் செய்ய வேண்டும்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்.முந்தைய தேர்வுத் தாள்களை மனதில் வைத்து அவற்றிற்கும் தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. டிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டுக்குள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இன்று பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் திருப்பதியில் உள்ள மெகா டி.எஸ்சி இலவசப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் இபிசி, இடபிள்யுஎஸ் பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான 220 மாணவர்களுக்கு 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்சி சிப்பாய் சுப்பிரமணியம், மாநில வன்னேகுல க்ஷத்திரிய கழக தலைவர் சி.ஆர்.ராஜன், மாநில நாயி பிராமணர் கழக தலைவர் ருத்ரகோடி சதாசிவம் இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல் துறை அலுவலர் சென்னையா, மாவட்ட கூட்டுறவு அலுவலர் லட்சுமி, உதவி பிசி நல அலுவலர் ஜோத்ஸ்னா, பிசி நலத்துறை பணியாளர்கள், பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post டிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டுக்குள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள்: சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article