டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 25 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

17 hours ago 3

சென்னை: டிஎன்பிஎஸ்சி வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 25 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 47 பண வசூலாளர்கள் பணி நியமன ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 4 ஆண்டு திமு.க ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 87 இளநிலை உதவியாளர்கள், 112 பண வசூலாளர்கள், 11 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 60 உதவிப் பொறியாளர்கள், 10 சமுதாய அலுவலர்கள், கருணை அடிப்படையில் 2 பணவசூலாளர்கள், 1 வரைவாளர் ஆக மொத்தம் 283 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், உதவி செயலாளர் (நிர்வாகம் ) அ.கிருஷ்ணவேனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 25 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article