டி20 தரவரிசை; பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய அபிஷேக் சர்மா

2 hours ago 1

துபாய்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இந்த டி20 தொடர் நிறைவடைந்ததும் ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (855 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) 38 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா (803 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (798 புள்ளி) 4வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (738 புள்ளி) 5வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டிஸின் அகெல் ஹொசைன் (707 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷித் (705 புள்ளி) மற்றும் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (705 புள்ளி) 3 இடங்கள் உயர்ந்து 2வது இடத்தில் உள்ளனர். இலங்கையின் வனிந்து ஹசரங்கா (698 புள்ளி) 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா (694 புள்ளி) 5வது இடத்திலும் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (251 புள்ளி) முதல் இடத்திலும், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி (231 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (209 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.


India star surges a whopping 38 places to the No.2 spot in the ICC Men's Player Rankings

Full details from the latest update https://t.co/TOX0nyxJlI

— ICC (@ICC) February 5, 2025

Read Entire Article