டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா

18 hours ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன் எடுத்தார்.

மும்பை தரப்பில் பாண்ட்யா, பவுல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 12 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இந்திய வீரராக இணைந்து சாதனை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல்;

டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) - 6970 ரன் மற்றும் 631 விக்கெட்

ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) - 7438 ரன் மற்றும் 492 விக்கெட்

ஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்) - 9018 ரன் மற்றும் 470 விக்கெட்

முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 6135 ரன் மற்றும் 369 விக்கெட்

சமித் படேல் (இங்கிலாந்து) - 6673 ரன் மற்றும் 352 விக்கெட்

கைரன் பொல்லார்டு (வெஸ்ட் இண்டீஸ்) - 13,537 ரன் மற்றும் 326 விக்கெட்

ரவி போபரா (இங்கிலாந்து) - 9486 ரன் மற்றும் 291 விக்கெட்

டேனியல் கிறிஸ்டியன் (ஆஸ்திரேலியா) - 5848 ரன் மற்றும் 281 விக்கெட்

மொயீன் அலி (இங்கிலாந்து) - 7140 ரன் மற்றும் 375 விக்கெட்

ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 8821 ரன் மற்றும் 343 விக்கெட்

முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) - 7946 ரன் மற்றும் 202 விக்கெட்

ஹர்திக் பாண்ட்யா (இந்தியா) - 5390 ரன் மற்றும் 200 விக்கெட்

Read Entire Article