
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி, குருப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 12ஆவது முறையாக குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.