
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சந்தானம். இவர் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கீதிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிம்பு பேசியதாவது, இன்றைய சினிமாவில் மிக சீரியசாக படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது. எல்லா படங்களும் ஆக்ஷன் படங்களாக உள்ளன. இப்போது, டூரிஸ்ட் பேமிலி பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. அப்படிப்பட்ட சந்தோஷமான படங்கள் நிறைய வர வேண்டும். அப்படிப்பட்ட படங்கள் வரவேண்டுமானால் சந்தானும் ஹீரோவாக நடிப்பதுடன் சேர்த்து என் போன்ற, ஆரியா போன்றவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும். அதற்கான ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற்பதற்காகவே எஸ்டிஆர் 49 படத்தில் சந்தானம் இணைந்துள்ளார். இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்ப்பீர்கள்' என்றார்.