உதகை: டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்காகவே நீட் விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார் என மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டத்துக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் பாஜக மண்டல் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அவர், மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியும் பா‌.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை சுவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.