சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம்: பேரவையில் அறிவிக்க வேண்டுகோள்

1 day ago 2

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வரலாறு படைத்தவர் கலைஞர். கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 43,138 சத்துணவு மையங்களில் பயன் பெறும் 42.71 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு ஊட்டும் மானிய தொகை ஆண்டு ஒன்றிற்கு ரூ.61.61 கோடியாக உயர்த்தி வழங்குவதாக பேரவையில் அறிவித்துள்ளார்.

இது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. இதைப் போல சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளருக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சம் ஆக வழங்கிட வேண்டும். மேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக வழங்கிடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 110வது விதியின் கீழ் அறிவிப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம்: பேரவையில் அறிவிக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article