சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சுகாதாரத் துறை மிகப்பெரிய ஏற்றம் காணும் வகையில், சட்டசபையில் வருகின்ற ஏப்ரல் 22ம் தேதியன்று துறை மானியக் கோரிக்கையின் போது பின்வரும் கோரிக்கைகளை அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. எனவே இதனை மாற்றும் வகையில் சுகாதாரத் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களின் சம்பளத்திற்காக, ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அரசு மருத்துவர்களின் சம்பளத்திற்காக கூடுதலாக ரூ.300 கோடி அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.