டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் முத்தரசன் உட்பட1,000 பேர் கைது

4 hours ago 1

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற முத்தரசன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் 34 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 2006ம் ஆண்டு முதல் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட முயன்றனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் நா.பெரியசாமி தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயற்சிக்கும் போது, காவல்துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். இப் போராட்டத்தை தொடங்கி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ஏஐடியூசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் த.தனசேகரன் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் முத்தரசன் உட்பட1,000 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article