'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

2 weeks ago 5

ரியாத்,

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 8 வீராங்கனைகள் 'பர்பிள்', 'ஆரஞ்சு' என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

பர்பிள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), 5-வது இடத்தில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஒலிம்பிக் சாம்பியனும், 7-வது இடம் வகிப்பவருமான ஜாங் கின்வென்னும் (சீனா) இடம்பெற்றுள்ளனர்.

ஆரஞ்சு பிரிவில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), 3-வது இடத்தில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா), 6-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), 13-ம் நிலை வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவாவும் (செக்குடியரசு) இடம் பிடித்துள்ளனர்.

இதில் ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். இதேபோல் டாப்-8 ஜோடிகள் இடையிலான இரட்டையர் ஆட்டமும் நடைபெறுகிறது.

Read Entire Article