சென்னை: ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-2024ம் ஆண்டுக்கான கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தியதில் உற்பத்தி தொழிலில் 7.5 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024 ஜூன் வரையிலான காலத்தில் புள்ளியியல் மற்றும் திட்ட அமாலாக்க அமைச்சகத்தின் ஆண்டுத் தொழில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த உற்பத்தி தொழில்களில் வேலை செய்யும் நபர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை கடந்த 2022-2023ம் ஆண்டில் 1.72 கோடியாக இருந்தது. அது தற்போது உயர்ந்து 1.85 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு முன்பு (2018-2019) இருந்த வேலைவாய்ப்பைவிட 2022-2023ம் ஆண்டில் வேலைவாய்ப்பு 22.14 லட்சமாக உயர்ந்துள்ளது . சராசரி ஊதியமும் அதிகரித்துள்ளது . உற்பத்தி துறையில் ஈடுபடும் நபர்களின் ஊதியத்தை 2021-2022ம் ஆண்டு மற்றும் 2022-2023ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தனிநபர் ஊதியம் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-2022ம் ஆண்டில் தொழிற்சாலைகளில் 1 கோடியே 72 லட்சத்து 15 ஆயிரத்து 350 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். அந்த எண்ணிக்கை 2022-2023ம் ஆண்டில் 1 கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. மொத்த மதிப்புக் கூட்டலை பொருத்தவரையில் 2021-2022ம் ஆண்டைவிட 2022-2023ம் ஆண்டில் தற்போதைய விலையில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளின் உள்ளீடுகளை பொருத்தவரையில் 2021-2022ம் ஆண்டைவிட 2022-2023ல் 24.4 சதவீதமாக உள்ளீடு இருந்தது. அது 21.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022-2023ம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட மூலதனம், உள்ளீடு, ஜிவிஏ, வேலை வாய்ப்பு மற்றும் ஊதியங்கள் உயர்ந்துள்ளது.
2022-2023ம் ஆண்டில் இந்த வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை ஊக்கிகளாக உலோகங்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், மோட்டார் வாகனத் தொழில்கள் இருந்தன. இவை தொழில்துறை உற்பத்தியில் 58 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், 2021-2022 ஆண்டுடன் ஒப்பிடும் போது உற்பத்தி வளர்ச்சி 24.5 சதவீதமாகவும், ஜிவிஏ வளர்ச்சி என்பது 2.6 சதவீதமாகவும் இருந்தது.மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) அடிப்படையில் 2022-2023ம் தமிழ்நாடு, கர்நாடகா டாப் 5 இடங்களில் உள்ளன. இவை 2022-2023ம் ஆண்டில் நாட்டின் மொத்த ஜிவிஏக்கு 54%க்கு மேல் பங்காற்றியுள்ளன.
தொழிற்சாலை எண்ணிக்கை, வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. றன. தொழிற்சாலைகளில் நிலையான மூலதனம் முதலீடு மூலதனம் கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஆண்டு தொழில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
The post டாப் 5 மாநிலங்கள் வரிசையில் இடம் தொழிற்சாலை, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு புள்ளி விவரத்தில் தகவல் appeared first on Dinakaran.