புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் என்றாலே அன்பளிப்புகள்தான் பிரதானம். இதோ டாப் 5 அன்பளிப்புகளான செயலிகளும் அதன் சேவைகளின் விபரங்களும்…
கிஃப்ட் அட்வைசர்: யுனிக் கிஃப்ட் ஐடியாஸ் (Gift advisor: unique gift ideas)
கைகளினாலேயே செய்து கொடுக்கும் அன்பளிப்புகள் துவங்கி, எந்த வயதினருக்கு, எந்த உறவுக்கு அன்பளிப்புக் கொடுக்கவிருக்கிறோமோ அதை அடிப்படையாகக் கொண்டு என்ன அன்பளிப்புகள் கொடுக்கலாம் உள்ளிட்ட ஆலோசனைகள் அனைத்தும் இந்தச் செயலியில் பெறலாம். DIY(Do it Yourself) எனப்படும் நாமே செய்து கொடுக்கும் அன்பளிப்புகளுக்கான செய்முறைகளும், வீடியோக்களாக இந்தச் செயலியில் பெறலாம்.
அமேசான் (Amazon Shopping App)
அதிகளவில் தயாரிப்புகளைக் கொண்ட ஷாப்பிங் தளம், கிட்டத்தட்ட அனைவருக்கும் பரிசுகளைக் கண்டு
பிடிப்பதை எளிதாக்குகிறது. மேலும் ஒரு நாளில் டெலிவரி என்னும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.
கிஃப்ட்ஸ்டர் (Giftster)
கார்ப்பரேட் பரிசுகள், குழுவாக, அல்லது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அன்பளிப்புகள் வழங்குவதில்
சிறப்பானச் செயலி. மேலும் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு பரிந்துரைகளை செயலியிலேயே ஆலோசித்து கிஃப்ட்கள் கொடுக்கும் வசதி, பிறந்தநாள், விடுமுறை நாட்கள் அல்லது ரகசியமாக சான்டா கிளாஸ் போல் அன்பளிப்புகள் வழங்கவும் இந்த செயலி உதவுகிறது.
ஐஜிபி (IGP – Indian Gift Portal App)
ஒரே நாளில் டெலிவரி என்னும் சிறப்பான வசதியுடன் பூக்கள், கேக்குகள் மற்றும் சாக்லேட், டெடி பொம்மைகள் உள்ளிட்ட பிற பரிசுகளை அனுப்புவதில் இந்தியாவில் பிரபலமான செயலி.
எஃப் என் பி (FNP – Flower & Petals)
பூக்கள் மற்றும் கேக்குகளை அனுப்புவதற்கான மற்றொரு சிறப்பான செயலி. பிறந்தநாள், பண்டிகைகள், சிறப்பு வாழ்த்துகள் உள்ளிட்ட அனைத்து நாட்களுக்கும் கேக் மற்றும் பூக்களை ஒரே நாளில் கொண்டு சேர்க்க உதவும் செயலி. இவை தவிர எக்ஸ்பீரியன்ஸ் சாகா(ExperienceSaga), ப்ளிங்கிட் (Blinkit), பிக் பாஸ்கெட்(BigBascket), ஸெப்டோ (Zepto) உள்ளிட்ட செயலிகளும் உடனடி அன்பளிப்புகளுக்கான வசதியுடன் செயல்படுகின்றன.
– கவின்
The post டாப் 5 கிஃப்ட் ஸ்பெஷலிஸ்ட் செயலிகள்! appeared first on Dinakaran.