நாகப்பட்டினம்: டானா புயல் சின்னம் காரணமாக நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
வங்கக் கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தீவிர புயலாக உருவெடுத்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.