புதுடெல்லி,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9-ந்தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .
மேலும் 2024 பிப்ரவரியில் ஏலம் தொடங்கிய போது தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 2024ல் ஏல முடிவை அறிவிக்கும் வரை தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வர வில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.