ஜெய்ஸ்வால் மென்மேலும் முன்னேற போகிறார்: ராகுல் டிராவிட் கணிப்பு

3 months ago 9

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அளித்துள்ள பேட்டி: விராட் கோஹ்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நன்றாக பேட்டிங் செய்தார். 6 மாதங்களுக்கு முன் தென்ஆப்ரிக்காவில் ஆடிய போது கடினமான 2 பிட்ச்சில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று நினைத்தேன். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்திருப்பது அவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். எனவே இந்த தொடரில் பெரிய அளவில் செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

ஜெய்ஸ்வால் நாளுக்கு நாள் பலமான வீரராக திகழ்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தான் அவர் அறிமுகமானார் என்று நம்புவது கடினம். அவர் உண்மையாக விளையாட ஆரம்பித்து நீண்ட காலம் ஆகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா செல்லவும், பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவும், ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடிக்கவும் பலரால் முடியாத காரியம். அவரது ரன்பசி, ஆசை, உந்துதல் ஆகியவற்றால் அவர் மென்மேலும் முன்னேற போகிறார் என்று நம்புகிறேன், என தெரிவித்துள்ளார்.

The post ஜெய்ஸ்வால் மென்மேலும் முன்னேற போகிறார்: ராகுல் டிராவிட் கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article