‘தொகுதி மறுவரையறை மீது ஆதாரமற்ற அச்சம்’ - அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக பாஜக அறிவிப்பு

2 hours ago 2

சென்னை: “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஆதரித்து அன்றைய தினம் பாஜக கையெழுத்து பிரச்சாரத்தைத் தொடங்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் ஆதாரமற்ற அச்சம் குறித்து விவாதிக்க, மார்ச் 5-ம் தேதி அன்று திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, தமிழக பாஜகவை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருந்த உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கருத்துகளை, இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

Read Entire Article