ஜெய்ஸ்வால் அரைசதம்.. பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

15 hours ago 1

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் இருந்து மீண்டும் கேப்டனாக செயல்படுகிறார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் நிதிஷ் ராணா 12 ரன்களிலும், சிம்ரோன் ஹெட்மேயர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் ரியான் பராக் (43 ரன்கள்), துருவ் ஜூரெல் (13 ரன்கள்) அதிரடியாக விளையாட ராஜஸ்தான் 200 ரன்களை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்துள்ளது. பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் களமிறங்க உள்ளது.

Read Entire Article