நீலகிரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார் முதல்-அமைச்சர்

23 hours ago 3

நீலகிரி,

ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு;

* நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் ரூ.26.06 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்.

* பழங்குடியின மக்களின் வாழ்வியலை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையிலும், அதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையிலும் ரூ.10 கோடி மதிப்பில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

* 'எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' எனும் சுற்றுலா முறை, ரூ.5 கோடி செலவில் 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்

* ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி செலவில் Multi-Level கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்

* நடுகாணி மரபணு தொகுதி சூழலியல் இயற்கை சுற்றுலா மையம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

* பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாய கூடங்களும், நகர்ப்புற பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு ரூ.10 கோடி செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும். 

Read Entire Article