புதுடெல்லி: மாநிலங்களவையில் டிசம்பர் 17ம் தேதி அரசியலமைப்பு மீதான விவாதத்தின்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,‘‘நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதித்ததற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி 3ம் தேதி ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் ஜனவரி 26ம் தேதி அம்பேத்கர் பிறந்த இடமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள மோவில் மிகப்பெரிய பேரணியுடன் முடிவடையும். அம்பேத்கரின் மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்காக வருகிற 26ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை சம்விதன் பச்சாவோ ராஷ்ட்ரிய பாதயாத்திரை நடத்தப்படும்” என்றார்.
The post ‘ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ அமித்ஷா பதவி விலக கோரி காங். பிரச்சாரம் தொடக்கம்: மபியில் ஜன.26ல் முடிகிறது appeared first on Dinakaran.