
திருவனந்தபுரம்,
ரஜினிகாந்தி நடிப்பில் நெல்சன் இயகத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமத்தை இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திடைப்படத்தின் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார். ரஜினிகாந்தை காண அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.