ஜெனிவா ஒப்பந்த தினம் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள்

1 month ago 8

 

திருத்துறைப்பூண்டி, அக்.10: திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டியில் ஜெனிவா ஒப்பந்த தினம் அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஜூனியர் ரெட்கிராஸ்சார்பில் 75-வது ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு ஜூனியர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி ஆகியன திருத்துறைப்பூண்டி புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி எண் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார்.

திருத்துறைப்பூண்டி கிளைச் செயலாளர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் உடல் உறுப்பு தானத்தில் ஜே.ஆர்.சி-யின் பங்கு, ரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் சாலை பாதுக்காப்பில் விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் கன்வீனர் செந்தில்குமார், மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பொருளாளர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஜூனியர் ரெட்கிராஸ் கன்வீனர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆலோசகர்கள் போட்டிகளுக்கான எற்பாடு செய்திருந்தனர். நிறைவாக திருவாரூர் மாவட்ட ஆண்டின் ரெட் கிராஸ் சொசைட்டியின் கணக்காளர் கௌசல்யா நன்றி கூறினார்.

The post ஜெனிவா ஒப்பந்த தினம் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் appeared first on Dinakaran.

Read Entire Article