'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' - மனம் திறந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்

5 hours ago 1

சென்னை,

'பிளாக் விடோ' நட்சத்திரம் ஸ்கார்லெட் ஜோஹன்சன், 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தில் ஜோராவை நடித்திருக்கிறார். இப்டத்தை பற்றி சமீபத்தில் அவர் மனம் திறந்து பேசினார். தனக்கு 10 வயதாக இருந்தபோது "ஜுராசிக் பார்க்" படத்தை திரையரங்கில் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும், டைனோசரை பற்றிய ஆரம்பகால நினைவுகளை நினைவுபடுத்தியதாகவும் கூறினார். அவர் கூறுகையில், "எனக்கு சாகசம் ரொம்பப் பிடிக்கும். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் ஒரு பயணத்திற்கு செல்வது ரொம்பப் பிடிக்கும். ரிஸ்க் எடுக்க பிடிக்கும்.

எனக்கு 10 வயதாக இருந்தபோது "ஜுராசிக் பார்க்" படத்தை திரையரங்கில் குடும்பத்தோடு பார்த்தேன். இதில் எனது கதாபாத்திரம் டைனோசரை பற்றிய ஆரம்பகால நினைவுகளை நினைவுபடுத்தியது'' என்றார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப், தற்போது 'ஜுராசிக் வேர்ல்ட்' படத்தின் 4-வது பாகமான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்திற்கு கதை எழுதியுள்ளார். காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.


Read Entire Article