இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு

6 hours ago 1

மதுரை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு காட்டமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கில் தொடர்புடைய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கையை 8 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article