உடுமலை: திண்டுக்கல் மாவட்டம் பழநி, இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவர், மனைவி பிரீத்தி (40), மகன்கள் ஜீவப்பிரியன் (13), ஜெய பிரியன்(11), தந்தை நடராஜன் (75), தாய் மனோன்மணி (65) ஆகியோருடன் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் இறந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று அதிகாலை ஜீப்பில் திரும்பி கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுகா கருப்பசாமிபுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மதுரையில் இருந்து பாலக்காடுக்கு 22 பேருடன் வந்த வேனும், ஜீப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில், ஜீப்பில் சென்ற தியாகராஜன், பிரீத்தி, ஜெயபிரியன், மனோன்மணி ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். நடராஜன், ஜீவப்பிரியன் உட்பட 3 பேர் படுகாயமும் 12 பேர் லேசான காயமும் அடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள முதல்வர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
The post ஜீப்-வேன் மோதல் ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.