ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு

2 days ago 2

டப்ளின்,

அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்களுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் அணி விவரம்: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், கேவின் ஹோய், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், பாரி மெக்கர்த்தி, பிஜே மூர், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், மோர்கன் டாப்பிங், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

ஒருநாள் அணி விவரம்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், கேவின் ஹோய், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ். ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பாரி மெக்கர்த்தி, ஹாரி டெக்டர், மோர்கன் டாப்பிங், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

டி20 அணி விவரம்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட்.

போட்டி அட்டவணை விவரம்:

டெஸ்ட் போட்டி - பிப்ரவரி 6-10 - புலவாயோ

முதல் ஒருநாள் போட்டி - பிப்ரவரி - 14 - ஹராரே

2வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 16 - ஹராரே

3வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 18 - ஹராரே

முதல் டி20 போட்டி - பிப்ரவரி 22 - ஹராரே

2வது டி20 போட்டி - பிப்ரவரி 23 - ஹராரே

3வது டி20 போட்டி - பிப்ரவரி 25 - ஹராரே


:

Squads named and fixtures revealed for Ireland Men's tour to Zimbabwe: https://t.co/7OAR6y384h#BackingGreen @solar_failte ☘️ pic.twitter.com/APS13JFtk2

— Cricket Ireland (@cricketireland) January 3, 2025


Read Entire Article