
புலவாயோ,
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் முல்டெர் 367 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 456 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே பாலோ ஆன் ஆனது. இதனால், ஜிம்பாப்வே 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்துள்ளது. ஜிம்பாப்வே அணி இன்னும் 405 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி செல்கிறது.