
ஹூஸ்டன்,
வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டல அணிகளுக்கு இடையிலான 18-வது தங்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் ஹூஸ்டனில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அமெரிக்கா- நடப்பு சாம்பியன் மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ் எட்வர்ட்ஸ் 4-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். 27-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி பதில் கோல் திருப்பியது. ரால் ஜிமென்ஸ் இந்த கோலை அடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினார். 77-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் எட்சன் அல்வாரெஸ் கோலடித்தார். இதனால் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.