ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

4 months ago 13

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், திருச்சி என்.ஐ.டியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர்,

ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பணபரிமாற்றம், ஆதார் என டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவில் வலிமையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், , ஜிஎஸ்டி வரி விதிப்பால் நிறைய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி என்கிறார்கள், ஆனால் அது பெரிய வளர்ச்சி இல்லை, சாதாரணமாக வரக்கூடிய வருவாய் தான் . ஜிஎஸ்டியால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்.




Read Entire Article